அமைச்சு செயலாளர்களது பொறுப்பு அதிவிசாலமானது

செயலாளர்கள் நியமன நிகழ்வில் ஜனாதிபதி உரை

 

நாட்டின் அனைத்து விடயங்களும், பொதுச் சேவையை நம்பியே உள்ளன. அதனால், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர் களுக்கும் பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஆகயோருக்கான நியமனக்கடிதங்களை வழங்கிய பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இலக்குகள் என்பன அமைச்சுகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. அதனால், உரிய அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, எதிர்பார்த்திருக்கும் இலக்குகளை அடைவதற்கான முழுப் பொறுப்பும் அமைச்சுக்களின் செயலாளர்களிடமே உள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மகா சங்கத்தினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...