வழுக்கைத் தலை: ஆடவர் சிரச்சேதம்

மாலி நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பதற்கு வழுக்கைத் தலை கொண்ட ஆடவரின் தலையை குற்றவாளிகள் துண்டித்திருப்பதாக மொசம்பிக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த வாடிக்கையாளர் வராததால் மத்திய நகரான முவன்டிவாவில் அந்தத் தலையை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.

வழுக்கைத் தலை தங்கத்தை கொண்டுதரும் என்று சில மொசம்பிக் நாட்டவர்கள் நம்புகின்றனர்.

மொசம்பிக்கில் 2017 ஆம் ஆண்டிலேயே அதிர்ஷ்டத்திற்காக வழுக்கைத் தலை உடைய ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் முதல் முறை பதிவானது.

அதிர்ஷ்டத்திற்காக உடல் உறுப்புகள் விற்கப்படுவது மொசம்பிக், மாலாவி மற்றும் டன்சானியா நாடுகளில் வழக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...