சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி; நபர் கைது

சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிரெண்டு வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இவர் கொடிகாமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயதான நபர் ஒருவரே, நேற்று (18) பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(சாவகச்சேரி விசேட நிருபர்)


Add new comment

Or log in with...