சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தில் பெரும் வீழ்ச்சி

சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான பிறப்பு விகிதம் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டின் குழந்தைப் பிறப்பு விகிதம், 1,000 பேருக்கு 7.52 எனப் பதிவானது.

குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கூட்ட, சீனா அதன் குடிமக்களை மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு, ஒற்றைப் பிள்ளைக் கொள்கையை அது கைவிட்டு, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவித்தது.

மக்கள் தொகையில் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கை, பொருளாதார ரீதியாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சீனா அஞ்சுகிறது.

ஆனால், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு ஆகும் செலவு காரணமாகத் தம்பதி பலரும் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் உள்ளனர்.


Add new comment

Or log in with...