Tuesday, January 18, 2022 - 2:46pm
- பாகிஸ்தான் வர்த்தக சமூகத்திற்கு இம்ரான் கான் பாராட்டு
பிரியந்த குமாரவின் மனைவியின் கணக்கிற்கு 100,000 டொலர்களை வைப்பிலிட்ட சியல்கோட் வர்த்தக சமூகத்திற்கும், மாதாந்த சம்பளமாக அவரது கணக்கிற்கு 2,000 டொலர்களை வைப்பிலிட ஆரம்பித்துள்ள ராஜ்கோ நிறுவனத்திற்கும் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரியந்த குமார பணியாற்றி ராஜ்கோ இண்டஸ் ரீஸ் நிறுவனம், 10 வருடங்களுக்கு மாதாந்தம் 2,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment