இலங்கையின் இறையாண்மை முறி 500 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

இலங்கையின் இறையாண்மை முறி 500 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது-SriLanka Paid USD 500 Million Sovereign Bond-Ajith Nivard Cabraal

இன்று (18) முதிர்வடையும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறியை இலங்கை செலுத்தியுள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் இடுகையொன்றை இட்டுள்ள அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

குறித்த ட்விற்றர் இடுகையில் அவர், சர்வதேச நாணய நிதியம், சர்வதேச முதலீடுகள் சேவை தரப்படுத்தல் நிறுவனங்களான, Moody's Investors Service, Fitch Ratings, S&P Global Ratings ஆகிய நிறுவனங்களை Tag செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இறையாண்மை முறி என்பது அரசாங்க திட்டங்களுக்கு நிதியளிப்பது, பழைய கடனை செலுத்துதல், தற்போதைய கடனுக்கான வட்டி மற்றும் ஏனைய அரசாங்க செலவினத் தேவைகளுக்கு பணம் திரட்டுவதற்காக தேசிய அரசாங்கத்தால் வழங்கப்படும் கடன் பாதுகாப்பு ஆகும். இறையாண்மை முறிகள் வெளிநாட்டு நாணயத்தில் அல்லது அரசாங்கத்தின் உள்நாட்டு நாணயத்தில் குறிப்பிடப்படலாம்.


Add new comment

Or log in with...