1st ODI; SLvZIM: இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

1st ODI; SLvZIM: இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி-1st ODI-SLvZIM-SL Won by 5 Wickets

- பல்லேகலை மைதானத்தில் வெற்றிகரமாக கடந்த அதிகூடிய ஓட்ட இலக்கு

சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகும் 203ஆவது வீரராக சாமிக குணசேகர தனது முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாடினார்.

கண்டி, பல்லேகலை மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சீன் வில்லியம்ஸ் சதத்தை (100) பெற்றதோடு, இதில் 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கியிருந்தன.

ரெஜிஸ் சகப்வா 72 (81) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதில் 6 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கும்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக கருணாரத்ன10 ஓவர்களில் 69 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நுவன் பிரதீப் மற்றும் ஜெப்ரி வண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அந்த வகையில், 297 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 10 நான்கு ஓட்டங்களுடன் 75 (71), தினேஷ் சந்திமால் 4 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு 6 ஓட்டத்துடன் 75 (91) ஓட்டங்களைப் பெற்றனர்.

சரித் அசலங்க 6 நான்கு ஓட்டங்கள் மற்றம் 2 ஆறு ஓட்டங்களுடன் 71 (68) ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ரிச்சர்ட் கராவா 9 ஓவர்களில் 56 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அந்த வகையில் பல்லேகலை மைதானத்தில் ஒரு அணி கடந்த அதிகூடிய இலக்காக இந்த இலக்கு பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2015 இல் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 287 ஓட்டங்களை இலங்கை அணி கடந்ததே (288) இம்மைதானத்தின் சாதனையாக காணப்பட்டது.

இப்போட்டியின் நாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவானார்.

அதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

இத்தொடரின் 2ஆவது போட்டி நாளை (18) இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், 3ஆவதும் இறுதியுமான போட்டி ஜனவரி 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ZIMBABWE INNINGS (50 OVERS MAXIMUM)
BATTING   R B M 4s 6s SR
Takudzwanashe Kaitano  lbw b Vandersay 42 50 65 7 0 84.00
Regis Chakabva  c †BKG Mendis b Vandersay 72 81 130 6 1 88.88
Craig Ervine (c)  b PHKD Mendis 9 20 23 0 0 45.00
Sean Williams   b Karunaratne 100 87 130 9 2 114.94
Wessley Madhevere   b Karunaratne 20 25 35 1 0 80.00
Sikandar Raza  lbw b Pradeep 18 17 31 2 0 105.88
Ryan Burl  c Shanaka b Pradeep 4 4 3 1 0 100.00
Wellington Masakadza  run out (Karunaratne) 6 7 12 1 0 85.71
Blessing Muzarabani   b Karunaratne 3 6 13 0 0 50.00
Tendai Chatara  not out 1 2 5 0 0 50.00
Richard Ngarava  not out 10 2 2 1 1 500.00
Extras (lb 2, nb 1, w 8) 11  
TOTAL (50 Ov, RR: 5.92) 296/9  
Fall of wickets: 1-80 (Takudzwanashe Kaitano, 14.4 ov), 2-110 (Craig Ervine, 19.6 ov), 3-160 (Regis Chakabva, 29.1 ov), 4-202 (Wessley Madhevere, 37.5 ov), 5-248 (Sikandar Raza, 44.1 ov), 6-252 (Ryan Burl, 44.5 ov), 7-269 (Wellington Masakadza, 47.2 ov), 8-285 (Sean Williams, 49.1 ov), 9-286 (Blessing Muzarabani, 49.4 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Nuwan Pradeep 10 1 54 2 5.40 32 5 1 1 1
Chamika Gunasekara 1 0 8 0 8.00 4 1 0 1 0
Maheesh Theekshana 10 0 40 0 4.00 31 2 0 0 0
Dasun Shanaka 4 0 34 0 8.50 8 5 0 2 0
Chamika Karunaratne 10 1 69 3 6.90 25 7 2 1 0
Jeffrey Vandersay 6 0 44 2 7.33 15 5 1 1 0
Kamindu Mendis 6 0 32 1 5.33 15 2 0 1 0
Charith Asalanka 3 0 13 0 4.33 8 1 0 0 0
 
 
SRI LANKA INNINGS (TARGET: 297 RUNS FROM 50 OVERS)
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c †Chakabva b Sikandar Raza 75 71 105 10 0 105.63
Kusal Mendis  c †Chakabva b Muzarabani 26 24 29 6 0 108.33
Kamindu Mendis   b Ngarava 17 24 32 1 1 70.83
Dinesh Chandimal  c Ervine b Ngarava 75 91 143 4 1 82.41
Charith Asalanka  lbw b Ngarava 71 68 113 6 2 104.41
Dasun Shanaka (c) not out 10 12 18 1 0 83.33
Chamika Karunaratne  not out 5 2 4 1 0 250.00
Extras (b 4, lb 2, nb 1, w 14) 21  
TOTAL (48.3 Ov, RR: 6.18) 300/5  
Fall of wickets: 1-40 (Kusal Mendis, 6.4 ov), 2-81 (Kamindu Mendis, 13.6 ov), 3-147 (Pathum Nissanka, 24.4 ov), 4-276 (Dinesh Chandimal, 45.5 ov), 5-292 (Charith Asalanka, 47.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Blessing Muzarabani 9.3 0 58 1 6.10 32 9 0 2 1
Tendai Chatara 9 0 56 0 6.22 28 9 0 2 0
Richard Ngarava 9 0 56 3 6.22 30 4 2 4 0
Wellington Masakadza 6 0 29 0 4.83 13 1 0 1 0
Ryan Burl 1 0 12 0 12.00 2 2 0 0 0
Sean Williams 8 0 43 0 5.37 19 2 1 0 0
Sikandar Raza 4 0 23 1 5.75 7 1 0 0 0
Wessley Madhevere 2 0 17 0 8.50 3 1 1 0 0

 


Add new comment

Or log in with...