வாகனங்கள், காணிகள் தொடர்பில் தகவல்கள் திரட்ட நடவடிக்கை

நிதியமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவிப்பு

அமைச்சுக்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களில் உபயோகிக்கப்படும் வாகனங்கள், காணிகள், கட்டடங்கள் தொடர்பில் தகவல்களை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் கே.ஏ. ரம்ய காந்தி தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மேற்படி தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிதியமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெருமளவு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் அந்த அமைச்சுக்கள், நிறுவனங்களுக்குரிய வாகனங்களுக்கு மேலதிகமாக பெருமளவு வாகனங்கள் வாடகை அடிப்படையில் பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பெருமளவு காணிகளில் சட்டபூர்வமற்ற விதத்தில் பலர் வசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த அனைத்து தகவல்கள் மற்றும் அதற்காக செலவிடப்படும் செலவுகள் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக்கொடுக்குமாறும் அவர்அரச நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...