தனிமைப்படுத்தல் காலத்தினை குறைக்க அவுஸ்திரேலியா முடிவு

அவுஸ்திரேலியா, அத்தியாவசிய ஊழியர்களுக்கு  கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிகளைத் தளர்த்தவுள்ளது. 

ஊழியர் அணியிலும், விநியோகத் தொடரிலும் நெருக்கடியைக் குறைக்க அது உதவும். 

வைரஸ் தொற்றுக்கு ஆளானோருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லாமல், பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று தெரியவந்தால் அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பலாம். 

அதன் மூலம் பல்லாயிரம் பேர் ஊழியரணிக்குத் திரும்பமுடியும். 

கல்வி, போக்குவரத்து, அவசரச் சேவைப் பிரிவுகளில் வேலை செய்வோருக்கு அது பொருந்தும். 

வைரஸ் பரவலால், பலர் வேலைக்குச் செல்லத் தவறுவதால், அவுஸ்திரேலியாவில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. 

தனிமைப்படுத்தல் விதிகள் தளர்த்தப்படவில்லை என்றால், ஒரே நேரத்தில் ஊழியரணியின் பத்து வீதத்தினர் வேலைக்குச் செல்லாமல் இருக்கக்கூடும் என்று ஓர் அறிக்கை கூறுகிறது. 


Add new comment

Or log in with...