சீனாவில் தொடரும் கொரோனா பரவல்

சீனாவில் கொரோனா தொற்று பரவலே இல்லை என்ற இலக்கை அடைவதில் பெரும் சவால் எழுந்துள்ளது. அங்குள்ள பல நகரங்களில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் நீடித்து வருகிறது.

சீனப் புத்தாண்டும், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் நெருங்கி வருவதால், கவலை அதிகரித்துள்ளது. 

சீனாவில் கடந்த வியாழக்கிழமை 120க்கும் அதிகமானோருக்குக் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 41 பேர் பீஜிங் அருகே உள்ள தியான்ஜின் நகரைச் சேர்ந்தவர்கள்.  

அங்கு, கடுமையான முடக்கம், பெரிய அளவிலான பரிசோதனை ஆகியவற்றுடன், மற்ற நகரங்களுக்குக்கான பெரும்பாலான போக்குவரத்துச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், நகரை விட்டு வெளியே செல்ல மக்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். பீஜிங் செல்லும் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுவர். வைரஸ் தொற்று அபாயம் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்படுவர். 


Add new comment

Or log in with...