அமெரிக்க தூதரக அதிகாரிகள் 4 பேருக்கு ஹவானா சிண்ட்ரம்

ஜெனீவா மற்றும் பாரீஸ் நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அமெரிக்காவின் அதிகாரிகள் நான்கு பேர், சந்தேகத்திற்குரிய நரம்பியல் சார் நோயான ‘ஹவானா சிண்ட்ரத்தால்’ பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜெனீவாவில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று அமெரிக்க அதிகாரிகளுக்கும்,பாரீஸ் நகரத்தில் ஒரு அதிகாரியும் கடந்த கோடை காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்மப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக அந்நாட்டின் இராஜாங்கச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். அமெரிக்காவின் எதிரிகள், அந்நாட்டு ராஜ்ஜிய விவகார அதிகாரிகளை மைக்ரோவேவைக் கொண்டு இலக்கு வைக்கிறார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.


Add new comment

Or log in with...