பிரிட்டன் பிரதமருக்கு பதவி விலக அழுத்தம்

பிரிட்டனில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதை ஒப்புகொண்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரிட்டனில் முடக்கநிலை நடப்பில் இருந்தபோது, எண். 10 டவுனிங் ஸ்டிரீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அதற்குத் ஜோன்சன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

 பொதுமக்களின் சினத்தைப் புரிந்துகொள்ள முடிவதாக அவர் கூறினார்.

ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அப்பால் ஒருவரை மட்டுமே வெளியில் சந்திக்க, அப்போது அனுமதிக்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...