அவுஸ்திரேலிய அரசாங்கம், டென்னிஸ் விளையாட்டாளர் நோவக் ஜோகோவிச்சின் வீசா அனுமதியை மீண்டும் இரத்து செய்துள்ளது.
கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அவர், சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச்சின் வீசா அனுமதியில் பிழை இருந்ததால், கடந்த வாரம் அவுஸ்திரேலிய எல்லைக்காவல் அதிகாரிகள், விசாவை இரத்து செய்து அவரை ஹோட்டலில் தடுத்துவைத்தனர்.
பின்னர், அதன் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் வெற்றிபெற்று விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜோகோவிச்சின் வீசா அனுமதியை மீண்டும் இரத்து செய்ததாக அறிவித்தார். பொதுநலன் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் பங்கேற்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்க மெல்போர்ன் சென்ற உலகின் ‘முதனிலை' டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் ஜோகோவிச் அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்தது.
கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்றி வரும் அவுஸ்திரேலிய அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அளித்த பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அவுஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
எனினும், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி விசாவை இரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் இரத்து செய்துள்ளார். இதன் மூலம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகத்திற்குள்ளாகி உள்ளது.
இதுகுறித்து அலெக்ஸ் ஹாவ்கே கூறுகையில் 'பொது மக்களின் நலன் கருதி என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 133சி(3) பிரிவின் கீழ் நோவக் ஜோகோவிச் விசாவை இரத்து செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.இந்த வீசா இரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜோகோவிச் எதிர்வரும் 3 வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அறிய வருகிறது.முந்தைய இரண்டு வாரங்களில் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான அவரது நுழைவு அறிவிப்பில் ஏற்பட்ட பிழையால் ஜோகோவிச்சின் காரணம் உதவவில்லை, அதற்கு அவர் தனது முகவர் காரணமாகக் கூறினார். கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, டிசம்பர் 18 அன்று ஒரு பிரெஞ்சு பத்திரிகைக்கு வழங்க மறுத்திருந்தமை விசேட அம்சமாகும்.இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் நாளை திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என அவுஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.வீசா இரத்துக்கு எதிராக மெல்போர்னில் உள்ள நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜோகோவிச் வீசா இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 11 காரணங்களை ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.
டிசம்பரில் ஜோகோவிச்சிற்கு கடுமையான பெரிய நோய் இருந்ததாக எந்த தரவும் இல்லை என்றும் இது தொடர்பான அவரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளையும் நீதிமன்றத்தில் அவர்கள் வழங்கினர். இருதரப்பு வாதங்கள் கேட்ட நீதிபதி அந்தோனி கெல்லி, ஜோகோவிச் விசாவை இரத்துச் செய்த உத்தரவிற்கு தடை விதித்தார்.
Add new comment