ஜப்னா கரப்பந்தாட்ட லீக்; 'அரியாலை கில்லாடிகள் 100' அணிக்கு கிண்ணம்

யாழ். மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தை முன்னேற்றும் முகமாக, முதன் முறையாக யாழ், மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜப்னா கரப்பந்தாட்ட லீக் தொடரில் அரியாலை கில்லாடிகள் 100 அணி கிண்ணம் வென்றது.

(7.01.2022)திகதி வெள்ளிக்கிழமை புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில், மின்னொளியில் இரவு 7 மணி இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் ஆவரங்கால் கிங்ஸ் பயிட்டஸ் அணியை எதிர்த்து அரியாலை கில்லாடிகள் 100 அணி மோதிக் கொண்டன.

மைதானத்தில் ஆயிரக்கணக்கான இரசியர்கள் சூழ்ந்திருக்க இறுதியாட்டம் ஆரம்பமானது.இறுதியாட்டம் 5 சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்து.

இதில் ஆவர ங்கால் கிங்ஸ் பயிட்டஸ் அணி முதலாவது சுற்று ஆட்டத்தினை 25:23 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டது.

பதிலுக்கு அரியாலை கில்லாடிகள் 100 அணி இரண்டாம் சுற்று ஆட்டத்தினை 25:21 என்ற செற் கணக்கில் வெற்றி கொண்டது.

அரியாலை கில்லாடிகள்100 அணி மூன்றாம் சுற்று ஆட்டத்தினை 2519 என்ற செற் கணக்கில் வெற்றி கொண்டது.

ஆவரங்கால் கிங்ஸ் பயிட்டஸ் அணி நான்காவது சுற்று ஆட்டத்தினை 25:10 என்ற செற் கணக்கில் வெற்றி கொண்டது.

நிறைவடைந்த முதல் நான்கு சுற்று ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பதிவு செய்ததினால் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக ஐந்தாவது சுற்று ஆட்டம் இடம்பெற்றது.

இதில் ஐந்தவது சுற்று ஆட்டத்தில் கில்லாடிகள் 100 அணி 16:14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது .

ஆட்ட முடிவில் கில்லாடிகள் 100 அணி 3:2 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

Fair Paly அணிக்கான விருதினை நீர்வை பசங்க அணி பெற்றுக்கொண்டது.

சிறந்த வீரருக்கான விருதை ஆவரங்கால் கிங் ஃபைட்டர் அணி வீரர்சச்சித்தானந்தம் கபிலக்சன் பெற்றுக்கொண்டார்.

வளர்ந்து வீரருக்கான விருதினையும், ஆட்டநாயகன் விருதை அரியாலை கில்லாடிகள் 100 அணி வீரர் சிவனேஸ்வரன் சஞ்சஜன் பெற்றுக்கொண்டார்.

சிறந்த தாக்கு வீரருக்கான விருதை Aurangzeb King Fighters அணி வீரர் சச்சிதானந்தம் கபிலக்சன் பெற்றுக்கொண்டார்.

சிறந்ததொகுப்பாளர் விருதைஅரியாலை கில்லாடிகள் 100அணிவீரர் பத்மதாஸ் நிதர்சன் பெற்றுக்கொண்டார்.

சிறந்த லிபரோ வீரருக்கான விருதை Rising Islands அணி வீரர் வேதீஸ்வரன் கஜானன்பெற்றுக்கொண்டார்.

சிறந்த பெறுநருக்கான வீருதினையும்,சிறந்ததடுப்பாளருக்கான வீருதினையும்,அரியாலை கில்லாடிகள் 100அணிவீரர் சச்சிதானந்தம் ஜனகன் பெற்றுக்கொண்டார்.

யாழ் விளையாட்டு நிருபர்


Add new comment

Or log in with...