இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கைகுண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேவாலய வளாகத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முறைமைகள் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...