கவிதை நூல் வெளியீட்டுவிழா: 'நதிகளின் தேசியகீதம்'

சம்மாந்துறை மஸூறா ஏ.மஜீத் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'நதிகளின் தேசியகீதம்' கவிதை நூல் வெளியீட்டு விழா மருதமுனையில் நடைபெற்றது.

எழுத்தாளர் எம்.எம்.நௌசாத் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கலந்துகொண்டார்.

கவிஞர்.எம்.ஐ. அச்சிமுகம்மட் வரவேற்புரை நிகழ்த்த பேராசிரியர் செ.யோகராசா நூல்நயவுரை நிகழ்த்தினார்.

பிரதமஅதிதியான பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தமதுரையில்;

ஈழத்துத் தமிழ் பேசும் சமூகத்தின் ஓர் அங்கமான முஸ்லிம் பெண்களும் எழுத்துத்துறையில் அக்கறைகாட்டினர்.அந்தவகையில் முதன்மையானவராகக் குறிப்பிடவேண்டியவர் பெண் ஆழுமை சம்மாந்துறை மஸூறா.

இவர் 1979ஆம் ஆண்டுகாலப்பகுதியில் கவித்துறைக்குள் பிரவேசித்திருக்கின்றார். ஓவியம் வரைவதிலும் தனதுஈடுபாட்டைக்காட்டிவருகின்றார்.அறுவடை இவரதுமுதல் கவிதையாகும். புன்னகை சஞ்சிகையின் ஆசிரியையான இவர் புதுக்கவிதைஉலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாவார்.

கவிதை நூல் வெளியீட்டுவிழா: 'நதிகளின் தேசியகீதம்'

பெண்களின் உணர்வுகள் என்றஅடிப்படையில் இவரது கவிதைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கவிதையுலகு ஆய்வு செய்வது மிகக் கஸ்டமானது.சுமார் நாற்பது வருடஅனுபவமுள்ள எழுத்தாளரின் பதினைந்துவருடக் கவிதைகள் மாத்திரமே இங்குபதிவாகியிருக்கின்றன. நீண்டகால அனுபவமுள்ள எழுத்தாளரின் மிகக் குறைந்தளவிலான கவிதைகளைக் கொண்ட தொகுதி நமக்கு மிகக் காலம் தாழ்த்தியே கரம் எட்டியிருக்கிறது என்றார்.

கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் தமதுரையில்;

புதுமைநோக்கும் ஆவேசமும் புதியபலமும் கொண்டகவிதைகளை 90 களில் தந்தவர் என்றவகையில் இன்றுஎழுதுகின்ற பெண் கவிஞர்களுக்குஆதர்சமாக அமைந்த மூத்தகவிஞர் என்ற முக்கியத்துவம் பெறுகின்றார். அன்றைய பெரோஸா ஹூசைன்,விலங்கிடப்பட்ட மானிடம் தந்தசுல்பிகா,இளைய சுல்பிகா,கலைமகள் ஹிதாயா போன்ற கவிஞர்களின் வரிசையில் மலர்ந்திருப்பவள் மஸூறா என்றால் அது மிகையாகாது.

இம்சிக்கும் தூசுகளைக் கழுவிஅகழவுகளைத் தாண்டிபொங்கிப் பிரவாகிக்கையில் காட்டாறாக ஓடுகிறார்.அநியாயங்களைக் கண்டுஅவற்றைச் சுடர்விட்டுப் பொசுக்கும் தீயாகச் சுட்டெரிக்கின்றார் அன்பிற்கினியவர்களின் பாதைமுழுக்கவெளிச்சம் பாய்ச்சும் நிலவாகநம்மிடையே எறிக்கிறார்.

இந்தக் கவிதைத் தொகுதியில் அநேகமான கவிதைகள் பெண்கள் பற்றியதாகவே இருக்கின்றன.பொதுவாகபெண்ணை இயற்கையோடுஅல்லது பஞ்சபூதங்களோடு ஏற்றிவைத்துப் படிமப்படுத்தும் அவர்களுக்கெதிரானவன் முறைகளைஒடுக்குதல்களை,சுரண்டல்களைபல இடங்களில் ஆவேசத்துடனும்சிலகட்டங்களில் நாசூக்காகவும் பகிர்ந்துகொள்வதைக் காணலாம் எனத் தெரிவித்தார்.

பி.எம்.எம்.ஏ. காதர்
(படங்கள்; மருதமுனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...