அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது

மருத்துவ தொழிலை பாதிக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையானது நியாயமானது.

இப்பிரச்சினை வன்னி மாவட்டத்திலும் காணப்படுவதாக, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுகாதார அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக குழு மற்றும் பொது சபையின் அனுசரணையுடன் அரச வைத்திய அதிகாரிகள் நாடளாவியரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதாவது மருத்துவத் தொழிலை பாதிக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்தே அரச வைத்திய அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வைத்திய அதிகாரிகளால் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பிரச்சினைகள் எனது தேர்தல் தொகுதியான வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றது.

எனவே சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுப்பது உகந்தது என நான் கருதுகின்றேன் என சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(தலைமன்னார் விஷேட நிருபர் - வாஸ் கூஞ்ஞ)


Add new comment

Or log in with...