வளர்ச்சிப் பாதையில் அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகம்

விளையாட்டு, கல்வி, சமூகசேவை போன்ற துறைகளில் அகலக் கால் பதித்திருக்கும் அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகம் 37 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, 38வது வருடத்தில் காலடி வைத்து, வீறுநடை போட்டு வருகின்றது. 1984ம் ஆண்டு விளையாட்டுக் கழகமாகத் தோற்றம் பெற்று, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விளையாட்டு, கல்வி, சமூகசேவை போன்ற துறைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பயணித்து வரும் அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகத்தின் நீண்டகால வெற்றிப் பயணமானது இமாலய சாதனை என்றால் அது மிகையாகாது.

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழக ஆரம்பகர்த்தாக்கள் இன்று பல்வேறு துறைகளில் உயர்ந்து நிற்கின்றனர். ஆனால், அவர்களது நன்நோக்கம்,முயற்சி வீண் போகாதவாறு கழகத்தின் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கண்கூடு.

விளையாட்டுக் கழகமொன்றை ஆரம்பிப்பது என்பது, இலகுவான காரியமாக இருக்கலாம்.

ஆனால், அதனை அங்கத்தினர்களுக்கும், சமூகத்தினருக்கும்,பிராந்தியத்திற்கும் பயன்மிக்கதாகவும், இலக்கு நோக்கிய பணயத்திலிருந்து விலகிவிடாது வளர்த்தெடுப்பதென்பது கடினமான காரியமாகும்.சுப்பர்சொனிக் கழகம் என்ன நோக்கத்திற்காக அன்று ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து சற்றும் விலகி விடாது, இன்றும் பெருமளவுஅங்கத்தினர்களுடன் பயணிக்கின்றது என்றால், அது வரலாற்றுச் சாதனைதான்.ஆரம்பகர்த்தாக்களின் நல்ல நோக்கமே இதற்கு காரணமாக இருக்க வேண்டும்.அங்கத்தினர்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்து கொண்டு, கழகமொன்று தன்னை வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொள்வது என்பது இலகுவானதல்ல. ஆனால்,சுப்பர்சொனிக் கழகம் அதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது என்பதற்கு அதன் அங்கத்தினர்களே சாட்சியாவர்.சுப்பர்சொனிக் கழக அங்கத்தினர்கள் சிறந்த ஒழுக்கசீலர்களாக மிளிர்வதுடன்,கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும் உயர்ந்து நிற்கின்றனர். பலர் பல்கலைக்கழக அனுமதி பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் பலர் விளையாட்டுத் துறையில் சாதனை நிலைநாட்டி கழகத்திற்கும்,பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இவ்வாறான சாதனையாளர்களைக் பாராட்டி கௌரவிக்கும்; 'வர்ண இரவு' விழா,அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் அண்மையில் விமர்சையாக நடைபெற்றது.

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.ஐ.எம்.அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற இவ்விழவில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

விழாவில், தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைக் குவித்து, அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும்,சுப்பர்சொனிக் விளையாட்டுக கழகத்திற்கும் பெருமை பெற்றுக் கொடுத்தவிளையாட்டு வீரர்கள் மற்றும் கல்வித்துறைச் சாதனையாளர்கள் பதக்கம் விருதுவழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.விளையாட்டு, கல்வி, சமூகசேவை போன்ற துறைகளில் சிறந்து மிளிரும் அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழக வளர்ச்சிக்காக எதிர்வரும்ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 02 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் உதைபந்து விளையாட்டு அபிவிருத்திக்காகவும்பிரத்தியேக நிதி உதவி வழங்கப்படும் என்றார். கழகத்தின் உப-தலைவரும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.அப்துல் முனாப், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத்,செயலாளரும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமானஏ.ஆர்.எம்.சாதீக், பொருலாளர் எம்.எஸ்.ஹம்ஸார், கழக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள், பெற்றார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

( அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...