புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு பதக்கங்கள்

வடமேல் மாகாண பூப்பந்து சம்மேளனத்தினால் குருநாகல் மாநகர சபை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற பெட்மின்டன் சுற்றுப்போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

இச்சுற்றுப் போட்டியில் 11 வயது, 15 வயது மற்றும் 19 வயது பிரிவினர்களுக்கான பெட்மின்டன் போட்டிகளில் சாஹிரா மாணவர்கள் 2 ம் இடங்களைப்பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

  • 11 வயதின் கீழ் தரம் 06 எம்.ஹவாசம், ஆதீப் அஹமத்,
  • 15 வயதின் கீழ் முஹம்மது அப்பத், ஏ.எம்.நாமிக்,
  • 19 வயதின் கீழ் எம்.பாசிம், எம்.ஹயாசிம்

ஆகியோரே வெற்றிகளை பெற்று பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். இப்போட்டிக்கு சாஹிரா தேசிய பாடசாலையின் உதவி அதிபரும், பெட்மின்டன் பயிற்றுவிப்பாளரும், தேசிய நடுவருமான எம். என். எம். ஷரீக் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...