கிளிநொச்சி மகாவித்தியாலய அணி வெற்றி

வட்டக்கச்சி மத்தியகல்லூரியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுவரும் 15வயதுப்பிரிவினருக்கிடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் கிளிநொச்சி மகாவித்தியாலய வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகாவித்தியாலய அணி 25 ஒவர்கள் நிறைவில் 5 விக்கெட்டினை இழந்து 115ஓட்டங்களைப்பெற்றது.

துடுப்பாட்டத்தில் தமிழின்பன் 38 ஓட்டங்களையும், மதுமிதன் 20 ஓட்டங்களையும், பெற்றனர்.பந்துவீச்சில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணி சார்பில் பிரணிகன்3 விக்கெட்டினையும்,செம்பியன்,கஜீபன்,ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட்டக்கச்சி மத்தியகல்லூரிஅணியினர் 16 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்டினையும்இழந்து 95ஓட்டங்களைப் மட்டும் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் தமிழின்பன், தெய்வீகன் ஆகியோர் தலா 4 விக்கெட்டினையும், பாநிலவன் 1 விக்கெட்டினையும்,வீழ்த்தினர்.

(யாழ்.விளையாட்டு நிருபர்)


Add new comment

Or log in with...