ஒன்லைன் ஷொப்பிங் கொள்வனவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்லைன் ஷொப்பிங் கொள்வனவாளர்கள ஆர்ப்பாட்டம்-Daraz Shopaholics demand MORE
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்றையதினம் (13) Daraz ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் (விற்பனை ஊக்குவிப்பு நடவடிக்கை)

நாடு முழுவதும் உள்ள கொள்வனவாளர்கள், வெறுமனே ஷொப்பிங் அனுபவத்திற்கு மேலதிகமாக பல புதிய விடயங்கள் தேவை என கோரிக்கை விடுத்து வீதிகளில் இறங்கியுள்ளனர்.

வழக்கமா ஷொப்பிங் அனுபவத்தின் எல்லைகளைத் தாண்டி அதிக பலனளிக்கும் விரிவாக்கப்பட்ட ஷொப்பிங் பொழுதுபோக்கிற்கும், ஒட்டுமொத்த ஷொப்பிங் சாகசத்தின் வெகுமதிகளையுமே அவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

ஒன்லைன் ஷொப்பிங் கொள்வனவாளர்கள ஆர்ப்பாட்டம்!-Daraz Shopaholics demand MORE

பொருட்களை பார்வையிட, ஷொப்பிங் செய்ய, விளையாட, அவற்றை ஆராய்வதற்கான கூடுதல் வாய்ப்புகள் இந்த கொள்வனவாளர்களால் காட்டப்படும் கோரிக்கைகளின் பட்டியலில் அடங்குகின்றன.

இலங்கையின் முன்னணி இலத்திரனியல் தளமாக, தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக, வெறும் ஷொப்பிங்கின் வரம்புகளை மிஞ்சும் அனுபவத்தை வழங்க வேண்டியதன் அவசியத்தை Daraz புரிந்து கொண்டுள்ளதனால், Daraz தனது பயணத்தின் ஒரு புதிய கட்டமாக ஷொப்பிங் அனுபவத்தை விட மேலதிகமாக புதியதோர் அனுபவத்தை வழங்கக் கூடியவாறான ஒன்றில் நுழைய உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள கொள்வனவாளர்களை ஒன்லைன் விற்பனையின் புதிய உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறது - இது ஓர் அதிவேக மற்றும் உள்ளடக்கமான அனுபவம் ஆகும்.

வழக்கத்திற்கு மாறான இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்.


Add new comment

Or log in with...