நீரிழிவு நோயாளிகளுள் 32 சதவீதமானோருக்கு விழித்திரை அழிவுநோய்

பார்வைத்திறனை பாதுகாக்க ஆண்டு தோறும் கண்பரிசோதனை அவசியம் என்கிறார் ​ெடாக்டர் திரிவேணி

அதிகமானவர்களின் பார்வைத்திறன் இழப்புக்கு நீரிழிவு ஒரு காரணமாகும். நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவுநோய் பலரைப் பாதித்துள்ளது. ஆண்டு தோறும் கண்பரிசோதனை செய்வது மற்றும் சிறியதாக இருப்பினும் பார்வைத்திறன் பிரச்சினைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுப்பது போன்றவற்றின் மூலம் இந்த நிலை உருவாகும் இடரை நீரிழிவு நோயாளிகள் பெருமளவு குறைக்க இயலும்.

இரத்த குளுக்ேகாஸ், இரத்தஅழுத்தம் மற்றும் கொலஸ்ட்​ேராலை கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் எடையை குறைப்பது, சமச்சீரான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் மனஅழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்றவை மூலம் நீரிழிவு நோயாளிகள் அவர்களது பார்வைத்திறனை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்வதில் பெரும் பங்காற்ற முடியும்” என்கிறார் ​ெடாக்டர் அகர்வால்ஸ் கண்மருத்துவமனை, சென்னையின், பொது கண்மருத்துவவியலின் முதுநிலை ஆலோசகரும் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணருமான ​ெடாக்டர் திரிவேணி.

“நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு கண்களில் இரத்தநாளங்களில் இயல்புக்கு மாறான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உள்ளார்ந்த இரத்தக்கசிவு மற்றும் திரவசுரப்பை அடைப்பதன் வழியாக பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது; விழித்திரையையும், கண்நரம்புகளையும் சேதப்படுத்துகிறது மற்றும் சில நேரங்களில் விழித்திரையையே இடம்பெயரச் செய்கிறது.

2020ம் ஆண்டில் நீரிழிவு நிலையில் கண்கோளாறுகளின் தொகுப்பு (SPEED) என்ற ஒரு சமீப ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளுள் சுமார் 32% பேருக்கு நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவுநோய் இருக்கிறது. எனினும், நீரிழிவு நோயாளிகளுள் பெரும்பான்மையானவர்கள் கண்பரிசோதனைகளுக்கு செல்வதில்லை; ஏனெனில், இதயம் அல்லது சிறுநீரகத்தை பாதிப்பதைப் போல கண்களையும் நீரிழிவு பாதிக்கும் என்ற விழிப்புணர்வு போதுமானளவு இல்லை. அத்துடன், ஆரம்ப நிலையில் விழித்திரை அழிவுநோயில் அதற்கானஅறிகுறிகள் தென்படாமல் இருக்கக் கூடும்” என்கிறார் அவர்.

“நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு பாதிப்பு இருக்கிறதா என்று அறிவதற்கு வகை 1 நீரிழிவுநோயாளிகள் (இளவயது நீரிழிவுநோயாளிகள்), நீரிழிவு நிலை இருப்பது அறியப்பட்டதன் ஐந்தாவது ஆண்டிலிருந்து கண்பரிசோதனையை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும். வகை 2 நீரிழிவு நோயாளிகளும், நீரிழிவு உறுதி செய்யப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக கண்பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இந்த இருவகை நீரிழிவு நோயாளிகளும், கண்தொடர்பான பிரச்சனைகள் எழும்போது உடனடியாக கண்மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மங்கலானபார்வை, இருட்டான திட்டுகள் அல்லது சரம் மிதப்பது போன்றவை இந்த அறிகுறிகளுள் சிலவாக இருக்கக் கூடும். இவைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிடில் நிரந்தர பார்வைத்திறனிழப்பிற்கு இதுவழி வகுக்கும்” என்று ​ெடாக்டர் திரிவேணி மேலும் கூறினார்.

விழித்திரை மற்றும் விழித்திரையின் மையப்பகுதி மீதான ஒரு விரிவான கண்பரிசோதனையின் வழியாக நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவுநோய் இருப்பதை கண்டறிய இயலும் என்று அவர் கூறினார்.

ஒவ்வொருஆண்டும் 1.5 மில்லியன் உயிர்களை பலிவாங்குகிற நீரிழிவு, உலகளவில் உயிரிழப்புக்கான முன்னணி காரணமாக இருக்கிறது. உலகளவில் 420 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு இருப்பதாகவும் மற்றும் அவர்களுள் 90 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவுநோய் இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. உலகில் மொத்த பார்வைத்திறனிழப்பில் 2.5%-க்கும் அதிகமாக நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவுநோயால் ஏற்பட்டிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் நீரிழிவு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதன் மக்கள் தொகையில்சுமார் 17% பேர் நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றனர். இது 2030ம் ஆண்டுக்குள் 19% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-–Mukunth B

[email protected]


Add new comment

Or log in with...