சிறுமியை காணவில்லை

மஹரகம, பொலிஸ் பிரிவில் நாவின்ன, மஹரகம பிரதேசத்தில் வசித்த 15வயது சிறுமி  கடந்த - 07ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இது வரை நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சிறுமி தொடர்பாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.  

நேஹா கௌமதி ஹேரத் , வயது 15, 05அடி, 03அங்குலம் உயரம், தலை முடி, நடு வகுடெடுத்து வாரி விடப்பட்டிருக்கும் என்பதுடன் மெலிந்த உடல் வாகைக் கொண்டவரென்றும் இறுதியாக பச்சை நிற டீ சேர்ட் ஒன்றையும் கறுப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் பற்றி தகவல்கள் தெரிந்திருப்பின் மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 071 8591645, அல்லது மஹரகம பொலிஸ் நிலையத்தின் 0112850222, அல்லது 0112850700 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.  


Add new comment

Or log in with...