இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் கொவிட் உறுதி

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “குறைவான பாதிப்புகளுடன் எனக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டு தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னை நேரில் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Add new comment

Or log in with...