சு.க. அமைச்சர்கள் சகலருமே அரசுடன் சுமுகமான உறவு

எவருமே வெளியேறுவர் எனத் தோன்றவில்லை

சுதந்திரக் கட்சி மாறுபட்ட கருத்துக்களை அண்மைக்காலமாக வெளியிட்டாலும் அக்கட்சி அரசிலிருந்து வெளியேறுமென்று கருதவில்லை. சு.க அமைச்சர்கள் சுமுகமான செயற்படுகின்றனர் என இணைஅமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரின் அண்மைக்கால விமர்சனங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,    அவ்வாறான கருத்துக்களை சுதந்திரக்கட்சி முன்வைத்ததை நாமும் அவதானித்தோம். சு.க அரசிலிருந்து வெளியேறும் என்று நாம் கருதவில்லை. அந்தக் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகளுள்ளன. அவர்களின் கருத்துக்களை முன்வைக்க சுதந்திரம் இருக்கிறது. அவை எமது கூட்டணி கட்சியாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு 03 வருடங்களும் பாராளுமன்ற தேர்தலுக்கு 04 வருடங்களும் உள்ளன. சு.க அமைச்சர்கள் இருவரும் அமைச்சரவையில் சமூகமான செயற்படுகின்றனர்.ஏனைய அமைச்சர்களும் அவ்வாறே நடக்கின்றனர். அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் இணைந்து செயற்பட முடியும் என கருதுகிறோம் என தெரிவித்தார். (பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...