எழுத்தாளர் மீஆத் காலமானார்

பிரபல தமிழ், ஆங்கில எழுத்தாளரும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியருமான கலாபூசணம் எம்.வை.எம்.மீஆத் கண்டி தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

சுகவீனம் காரணமாக அனுமதித்திருந்த நிலையில் அவர் காலமானார்.  அவரது ஜனாஸா நல்லடக்கம் தும்புலுவாவையில் நேற்று இடம்பெற்றது.

6பிள்ளைகளின் தந்தையான இவர் நீண்டகாலமாக எழுத்துத் துறையில் தடம்பதித்திருந்தார்.  

சுமார் 33வருட சேவையின் பின் ஓய்வுபெற்ற மீஆத் இறைநேசன், சாந்திமோகன், சமாதானப் பிரியன், சமாதானக் குயில் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவந்தார். 

இவரின் கன்னிக் கவிதை  தினகரன் பாலர் கழகத்தில் 1953ஆம் ஆண்டில் பிரசுரமானது. அன்றிலிருந்து சுமார் 25உருவகக் கதைகளையும் 16சிறு கதைகளையும் தமிழில் 200க்கும் மேற்பட்ட கவிதைகளையும் ஆங்கிலத்தில் 150க்கும் மேற்பட்ட கவிதைகளையும் 300க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.(பா) 


Add new comment

Or log in with...