Friday, January 7, 2022 - 9:10am
அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்த எம்.ஏ.டக்ளஸ் பதவியேற்றார்.
இவர் தனது கடமையை அம்பாறை கச்சேரியில் நேற்று (06) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ச, மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள், மதத் தலைவர்கள் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
(பைஷல் இஸ்மாயில்)
Add new comment