சுசிலுக்கு எதிராக SLPP ஒழுக்காற்று நடவடிக்கை

செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ள சுசில் பிரேம ஜயந்த தொடர்பில் பொதுஜன பெரமுனவின் அடுத்த அரசியல் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கட்சியின் அரசியல் செயற்குழு கூட்டத்தின்போது தீர்மானிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பதவி விலக்கல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாடொன்றின் போது கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...