இரு பிரதேச சபைகளின் தலைவர்கள் நீக்கம்

மத்திய மாகாண ஆளுநர் அதிரடி

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்திலுள்ள கண்டி, கங்கவட  கோரளை மற்றும் ஹங்குரான்கெத்த பிரதேச சபைகளின் தலைவர்களை மத்திய மாகாண ஆளுநர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

இரு தலைவர்களையும் நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05) வெளியிடப்பட்டது.

தொடர்ச்சியாக இரண்டு வரவு செலவுத் திட்ட தோல்விகள் காரணமாக கங்கவட கோரளை பிரதேச சபையின் தலைவர் சுபாஷ் யட்டவர மற்றும் ஹங்குரான்கெத்த பிரதேச சபையின் தலைவர் ரணசிங்க திஸாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ள அதேவேளை புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை துணைத் தலைவர்கள் பதவியில் இருப்பார்களென மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார். இதன்படி, கங்கவட்ட கோரளை பிரதேச சபையின் தலைவராக ருவான் பெர்னாண்டோவும், ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தலைவராக லக்ஷ்மன் பாலசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் 168 (2) பிரிவின் கீழ், வரவு செலவுத் திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால், தலைவர் பதவியை வகிக்க முடியாது, அதன்படி புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை துணைத் தலைவருக்கு தலைவராக செயல்பட அதிகாரம் அளிக்கப்படுமெனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லாஹ்


Add new comment

Or log in with...