இளவயதினர் முதல் முதியோர்வரை ஒளிவிலகல் கண்பார்வைக் குறைபாடு

நகரங்களில் வசிக்கும் 7முதல் 35வயது நிரம்பிய ஆண்களில் 60சதவீதம் பேர் 'ரெஃப்ராக்டிவ் எர்ரர்' (Refractive error) என்ற ஒளிவிலகல் குறைபாட்டால் பாதிப்படையும் ஆபத்தை மிக அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். Refractive error சரிசெய்யப்படாவிட்டால் கண்பார்வைக் கோளாறு, குருட்டுத்தன்மை அல்லது மங்கலான பார்வை (amblyopia) போன்ற கோளாறுகளுக்கு அது இட்டுச் சென்று விடும்.  

பெருந்தொற்று காரணமாக நம் அன்றாட வாழ்வில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு கண் பார்வை பிரச்சினைகளை கொண்டு வந்திருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்சினைதான் 'ரெஃப்ராக்டிவ் எர்ரர்' என்ற ஒளிவிலகல் குறைபாடு. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலையில், நீண்ட நேரம் ஒளித்திரையை பார்த்துக் கொண்டிருப்பதன் காரணமாக உலகளவில் திடீரென மிகப் பெருமளவில் இது அதிகரித்திருக்கிறது. ஒளிச்செறிவின் மிக அருகாமையில் நீண்ட நேரம் இருந்து வேலை பார்ப்பது ஒளிவிலகல் குறைபாடு ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரித்திருக்கிறது.  

ஒளி மிகச் சரியாக விழித்திரையின் மீது குவிவதை கண்ணின் வடிவமைப்பு தடை செய்யும் போது ஒளிவிலகல் குறைபாடு ஏற்படுகிறது. மங்கலான பார்வையில் வாசிப்பது கடினம், கண்கள் விலகும் பிறழ்வு, சோர்வு மற்றும் தலைவலி போன்றவைகளுக்கு ஒளிவிலகல் குறைபாடு இட்டுச் செல்கிறது. 'ரெஃப்ராக்டிவ் எர்ரர்' தொடர்பாக மிக பொதுவாக அறியப்படும் பிரச்சினைகளாவன:  

கிட்டப் பார்வைக் கோளாறு பொதுவாக வயது வந்தவர்களில் 15_ -49சதவீதத்தினரிடையேயும் மற்றும் இளம் வயதினர்களில் 1.2-42சதவீதத்தினரிடையேயும் உருவாகிறது.   தூரப்பார்வை கோளாறு. பொதுவாக வயதானவர்களிடையே காணப்படுகிறது.  

சிதறல் பார்வை ஒளிக்கதிர்களை பல்வேறு திசைகளுக்கு விலகிச் செல்ல வைத்து ஒரு பொதுவான குவிய மையத்தை உருவாக்க இயலாது செய்கிறது.  

டாக்டர் ரம்யா S, முதுநிலை வல்லுனர் – கண் மருத்துவர்  

சென்னை ​ெடாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவரான டொக்டர் எஸ். ரம்யா பின்வருமாறு கூறுகின்றார்.   "ஒளிவிலகல் குறைபாடு அனைத்து வயதினரையும் பாதிக்கக் கூடிய மிக பொதுவான கண்பார்வைக் கோளாறுகளில் ஒன்று. மரபு சார்ந்த (வயது, குடும்ப வரலாறு மற்றும் இனம் சார்ந்த) மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் (ஒளி குறைவான இடத்தில் மிக அருகாமையில் இருந்து அதிக நேரம் வேலை பார்ப்பது, மற்றும் வாசிப்பது, அதிகம் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது, உடலுழைப்பு குறைவு மற்றும் சமச்சீரான உணவை உண்ணாதது போன்றவை) கண்கள் பாதிப்படைக்கின்றன.  

கடந்த சில வருடங்களாக மக்கள் பலர் வாசிப்பதை கடினமாக உணருவதாக தெரிவித்திருக்கிறார்கள். பன்மடங்கு விடுமுறை நாட்கள் மற்றும் குழந்தைகளின் குளிர்கால விடுமுறை நாட்கள் காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுவாக நகரங்களில் வசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் 60சதவீதம் பேர் 7இல் இருந்து 35வயதுக்குட்பட்ட ஆண்களாக இருக்கிறார்கள்.     சூழ்நிலையை நிலைமையின் தீவிரத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். அறிகுறிகளற்ற ஒளிவிலகல் குறைபாட்டை கொண்டிருக்கும் மக்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம். இருப்பினும், அறிகுறிகள் உள்ள நோயாளிகள், கண்ணாடி,​ெகாண்டாக்ட் லென்ஸ், போன்றவற்றை அணிந்து கொள்வது, ஒளிவிலகல் சீர் செய்யும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது அல்லது இவை மூன்றையும் இணைத்து சிகிச்சை எடுத்துக் கொள்வது ஆகியவற்றை கருத்தில் கொள்ளலாம். இந்தப் பிரச்சினையின் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானது.    ஒளிவிலகல் குறைபாடு ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கண்பரிசோதனைகள், ஒளித்திரையை காணும் நேரத்தை குறைத்துக் கொள்வது, பரிந்துரைக்கப்பட்ட கண் கண்ணாடிகளை அணிந்து கொள்வது, 20 20 20பயிற்சிகளை ( ஒளித்திரையை காணும் ஒவ்வொரு 20நிமிடத்திற்குப் பிறகும், 20அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20செகண்டுகளுக்கு நீங்கள் பார்க்க வேண்டும்) மேற்கொள்வது மற்றும் ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்பது போன்றவை மூலம் இந்தப் பிரச்சினையை சமாளிக்க நாம் முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள செயல்திறன் மிக்க சிகிச்சை முறைகள் எளிதாக கிடைக்கும் இந்த சமயத்திலும், பொதுமக்களின் அலட்சியம் காரணமாக ஒளிவிலகல் குறைபாடு என்பது மிகப் பெரிய பொது சுகாதார சவாலாக இருக்கிறது".   இவ்வாறு ​ெடாக்டர் ரம்யா தெரிவித்தார்.  

தகவல்:
மணவை அசோகன்


Add new comment

Or log in with...