இறக்குமதி உருளைக்கிழங்கு, பெரிய வெங்காய வரிகள் ரூ. 30 இனால் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் மீதான விசேட இறக்குமதி வரி கிலோகிராமிற்கு ரூ. 30 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (01) முதல் இது அமுலுக்கு வருவதாக, நிதி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜானதிபதியின் ஆலோசனைக்கமைய, நிதியமைச்சரின் அனுமதியுடன், தற்போது சந்தையில் நிலவும் விலைகளை குறைப்பதன் அடிப்படையில், பாவனையாளர்களாகிய பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 2007ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வர்த்தகப் பொருட்கள் வரி சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் 2260/72 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...