Thursday, December 30, 2021 - 2:24pm
இம்மாதம் இதுவரை 69,941 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதிகாரசபையினால் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இம்மாதம் ஆகக் கூடுதலாக இந்தியாவிலிருந்து 19,574 பேரும், ரஷ்யாவிலிருந்து 7,951 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் இவ்வருடம் 174,930 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதோடு, இவ்வருடத்தின் டிசம்பர் மாதத்திலேயே அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Add new comment