2020 A/L மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தில்

2020 A/L மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தில்-2020 GCE AL Recorrection-Rescrutiny Results Released

48,810 பேர் விண்ணப்பம்

2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்த தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகளை, www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை விடைத்தாள் மீளாய்விற்காக 48,810 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

2020 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள், கடந்த வருடம் மே 04ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் கடந்த வருடம் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

பரீட்சார்த்திகள்
நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைகளுக்கு, 301,771 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பாடத்திட்டம்: 277,625 பேர்
பழைய பாடத்திட்டம்: 24,146 பேர்

64.39% ஆனோர் பல்கலைக்கழக தகுதி
2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 194,297 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்திருந்தது.

மீள்திருத்த பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெறலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவு
011-2784208
011-2784537
011-3188350
011-3140314
துரித இலக்கம்
1911

பெறுபேறுகளை பெற


Add new comment

Or log in with...