உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பப் பெண்

உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பப் பெண்-A Young Married Woman Suicide-Kodikamam Kachchai

- திருமாணமாகி 11 மாதங்கள்
- கடிதத்தில் சாவுக்கு காரணம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் தெற்கு கொடிகாமம் பகுதியில் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை இளம் குடும்பப் பெண் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.

திருமணமாகி 11 மாதங்களே ஆன குறித்த பெண் தனது சாவிற்கு கணவனோ, வேறு யாருமோ காரணம் இல்லை, தலைவலி காரணமாகவே இம்முடிவை எடுத்தேன் எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.

கச்சாய் தெற்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 27வயதான இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333

Add new comment

Or log in with...