மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக விகும் களுஆரச்சி

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக விகும் களுஆரச்சி-Vikum Athula Kaluarachchi Sworn in as a Court of Appeal Judge before the President

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக விகும் அத்துல களுஆரச்சி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக விகும் களுஆரச்சி-Vikum Athula Kaluarachchi Sworn in as a Court of Appeal Judge before the President

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்ன ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான விக்கும் அத்துல களுஆரச்சி கொழும்பு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்துறையில் பிரவேசித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக விகும் களுஆரச்சி-Vikum Athula Kaluarachchi Sworn in as a Court of Appeal Judge before the President

விக்கும் அத்துல களுஆரச்சி தனது 33 வருட சேவையில் 27 வருடங்கள் நீதவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும், குற்றவியல் மேல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். இவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் சிரேஷ்ட நீதிபதியும் ஆவார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.