கொட்டகலையில் மேலும் இரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவு

கொட்டகலையில் மேலும் இரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவு-2 Gas Cooker Explosion Reported in Kotagala

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு நேற்று (17) மாலை பதிவாகியுள்ளது.

கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதாக  பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலையில் மேலும் இரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவு-2 Gas Cooker Explosion Reported in Kotagala

சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இதேவேளை, கொட்டகலை சிமோல் டிரேட்டன் தோட்டத்தில் குடியிருப்பாளர்கள்  கேஸ்  அடுப்பில்  சமையல்  செய்து  கொண்டிருந்த போது,  திடீரென  கேஸ்     அடுப்பு  வெடித்ததால், கேஸ் அடுப்பு பலத்த சேதம் அடைந்துள்ளது.

கொட்டகலையில் மேலும் இரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவு-2 Gas Cooker Explosion Reported in Kotagala

இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர்)