இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன-Mahela Jayawardena Appointed as ‘Consultant Coach’ Effective From 01st January 2022

- ஜனவரி 01 முதல் அமுல்

2022 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் எதிர்வரும் 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அணியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் விடயங்களுக்கும் அவர் பொறுப்பாக இருப்பார் என்பதுடன், வீரர்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களுக்கு உரிய மூலோபாய ஆலோசனைகளை அவர் வழங்குவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன-Mahela Jayawardena Appointed as ‘Consultant Coach’ Effective From 01st January 2022