கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை (10) முதல் கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸான பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்கப்படுமென கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
அமெரிக்க தயாரிப்பான Pfizer தடுப்பூசி டோஸே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய> ஏற்கனவே கொழும்பு நகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி தொடர்பில் SMS மூலம் அறிவிக்கப்பட்டது போன்று, தகுதி வாய்ந்த அனைவருக்கும் SMS மூலம் திகதி, நேரம் ஆகிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படுமென, கொழும்பு மாநகர சபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளார்.
Eligibility criteria
1) Three months past since your 2nd dose (Az, Sinopharm, Sputnik, Moderna or Pfizer)
2) 30yrs and above— Dinu Guruge (@dinuguruge) December 9, 2021
போதுமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற வகையில் தடுப்பூசி மையங்களில் ஒன்றுகூட வேண்டாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Pfizer (Booster) தடுப்பூசி டோஸ் பெறுவதற்கான தகுதி
- 30 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்
- எந்தவொரு கொவிட் தடுப்பூசியினதும் (Astra Zeneca, Sinopharm, Sputnik, Moderna, Pfizer) 2ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக Pfizer தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.