ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இராணுவ சோதனைச்சாவடி ஒன்றில் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்த முயன்ற குற்றச்சாட்டில் பலஸ்தீன சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். நம்லுௗஸைச் சேர்ந்த 16 வயது முஹமது நிதால் யூனிஸ் என்ற சிறுவனே கொல்லப்பட்டவராவார்.
துல்கரம் நகரின் தெற்கில் இருக்கும் சோதனைச்சாவாடியில் வைத்து சுடப்பட்ட சிறுவன் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 34 வயது இராணுவ வீரர் தலை மற்றும் நெஞ்சில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தபோதும் அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட 25 வயது பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.