பிரியந்த குமாரவின் கொடூர கொலை; தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது

பிரியந்த குமாரவின் கொடூர கொலை; தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது-Priyantha Kumara Death-Most Wanted Suspect Arrested

இலங்கையரான பிரியந்த குமாரவின் கொடூர கொலையுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் பாகிஸ்தான் பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

பில்லி என அழைக்கப்படும் இம்தியாஸ் எனும் குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்து வந்திருந்த நிலையில், ராவல்பிண்டி நகருக்குச் செல்லும் பஸ் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.