ICTA வினால் SPARX ஆய்வகம் திறந்து வைப்பு

ICTA வினால் SPARX ஆய்வகம் திறந்து வைப்பு-Launch of SPARX Lab by ICTA Where Sri Lankan future entrepreneurship will be fostered
இடமிருந்து வலம்: LankaBell Ltd முகாமைத்துவப் பணிப்பாளரும், FITIS தலைவருமான கலாநிதி பிரசாத் சமரசிங்க; Niftron நிறுவுனர் ஷாமிலன் சோமசுந்தரம்; ICTA பிரதான நிறைவேற்று அதிகாரி பொறியியலானர் மஹிந்த பி. ஹேரத்; Hatch Works நிறுவுனர் ஜீவன் ஞானம், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா; ICTA தலைவரும், TRCSL பணிப்பாளர் நாயகமுமான ஓஷத சேனாநாயக்க; ICTA, பிரதான டிஜிட்டல் பொருளாதார அதிகாரி அநுர டி அல்விஸ், ICTA, சிரேஷ்ட முகாமையாளர் நெவிந்தரி பிரேமரத்ன, IronOne Technologies & BoardPAC இணை நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி லக்மினி விஜேசுந்தர

- இலங்கையின் எதிர்கால தொழில்முனைவின் வளர்ப்பிடம்

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA, இலங்கையை டிஜிட்டலை உள்ளடக்கிய நாடாக மாற்றும் நோக்குடன் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அரசாங்கத்தின் உச்ச ICT நிறுவனமாகும். டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்திற்கு இணங்க, ICTA ஆனது இலங்கையின் தொடக்கத் தொகுதியை (startup ecosystem) உருவாக்குதல், ஆதரித்தல், வளர்த்தல் ஆகிய செயற்பாடுகளில் உதவி வருகிறது.

SPARX ஆய்வகத்தை திறந்து வைத்துள்ளதாக ICTA அண்மையில் அறிவித்திருந்தது. இது தொடர்பான திறப்பு விழா, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா, ICTA பணிப்பாளர் நாயகமும், TRCSL இன் தலைவருமான ஓஷத சேனாநாயக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. ICTA யின் பிரதான நிறைவேற்று அதிகாரி மஹிந்த பி. ஹேரத், ICTA யின் பிரதான டிஜிட்டல் பொருளாதார அதிகாரி அநுர டி அல்விஸ் மற்றும் Hatch Works இன் நிறுவுனர் ஜீவன் ஞானம் உட்பட தொடக்கத் தொகுதி அமைப்பின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SPARX Lab என்பது இலங்கையில் ஆரம்ப கட்ட தொடக்க தொகுதிகளை (startup ecosystem) வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பௌதீக தளமாகும். தொடக்க தொகுதிகளை உருவாக்கவும், ஆதரிக்கவும், வளர்க்கவும் ICTA இற்கு உள்ள அதிகாரத்திற்கு இணங்க, இந்த அர்ப்பணிப்புள்ள பணியிடமானது வளரும் தொழில்முனைவோரை மேலோங்கச் செய்வதுடன், தங்களது சொந்த தொடக்கத்தை நிறுவனத்தை ஆரம்பிக்க திட்டமிடும் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல். நோக்குநிலை, ஆலோசனை வழங்குதல் போன்ற விடயங்களையும் மேற்கொள்ளும். அத்துடன், ICTA உடன் ஒத்த எண்ணம் கொண்டவர்கள், கல்வியாளர்கள், அரசாங்கம் மற்றும் ICTA தொடக்கத் தொகுதி அபிவிருத்திப் பிரிவு ஆகியோருடன் நெருக்கமாகச் செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் வலையமைப்பாக இணைவதற்கான வாய்ப்பையும் இதன்போது தொழில்முனைவோர் பெறுவார்கள்.

2010 ஆம் ஆண்டு முதல், ICTA ஆனது, தொடக்கத் தொகுதி அமைப்புகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் விழிப்புணர்வை உருவாக்குதல், தொழில் முனைவோர் கலாசாரத்தை ஏற்படுத்துதல், அடைகாத்து பேணுதல், சந்தைக்கான அணுகலை வழங்கல், ஆரம்ப நிலை நிதியை வழங்குதல், ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இதற்கான ஆதரவை வழங்கி வருகிறது. இது தவிர, ‘10,000 Ideas’, STEP Pre-Incubator, StartupSL, Regional Startup Hubs போன்ற முன்முயற்சிகள், இலங்கையில் தொடக்கத் தொகுதி அமைப்பின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக அமைந்துள்ளன.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா, “இலங்கையில் நிலவும் கலாசார மற்றும் பொருளாதார அமைப்பிற்குள், தொடக்க தொகுதிகளை ஆரம்பிப்பது பாரிய சவாலாக காணப்படுகின்றது. எனவே, தொழில்நுட்ப அமைச்சானது, ICTA உடன் இணைந்து, தொடக்கத் தொகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற தொழில்நுட்பம் சார்ந்த சூழலை உருவாக்கும் வகையில் இந்த தொடக்கத் தொகுதிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

ICTA Sri Lanka வின் தலைவர் மற்றும் TRCSL இன் பணிப்பாளர் நாயகமுமான ஓஷத சேனாநாயக்க இந்த ஆரம்ப விழாவில் உரையாற்றுகையில், "ICTA யிற்கு இது ஒரு குறிப்பிடும்படியான முக்கிய தருணமென நான் நம்புகிறேன். அடுத்த தலைமுறை தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொடக்க தொகுதியை செயற்படுத்துவோரின் வளர்ச்சியே எமது மிக முக்கிய புள்ளியாகும். எனவே, இலங்கையின் தொடக்கத் தொகுதியை செயற்படுத்துதல் மற்றும் வலுவூட்டுதலில், ICTA ஆனது முக்கிய பங்கை வகித்து வருகிறது.

பிரதானமாக SPARX ஆய்வகமானது, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் ஆரம்ப நிலை தொடக்க நிறுவனங்களின் மையமாக செயற்படும் என்பதுடன், அது ICTA, தொடக்கத் தொகுதி அமைப்பு மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து உரிய பாதையில் பயணிக்கும். அத்துடன் SPARX ஆய்வகமானது, பிராந்திய ரீதியிலான அனைத்து தொடக்க மையங்களுக்கும் பிரதான மையமாக செயற்படும்.

தொழில் முனைவோரைக் கொண்ட பல்கலைக்கழக கட்டமைப்பின் வெளிப்பாட்டின் காரணமாக பல்கலைக்கழக அடைகாத்து பேணும் வலையமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இறுதியாக, முக்கிய தூதுவர்கள் ஒன்று கூடி ICTA உடன் இணைந்து ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பணியாற்ற இது வழியமைக்கிறது.

ICTA Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் மஹிந்த பி. ஹேரத் இது தொடர்பில் தெரிவிக்கையில், "ICTA ஆனது, தொடக்கத் தொகுதிகளை நீண்ட காலமாக அடைகாத்து பேணி வருகிறது என்பதுடன், அது புதிதாக இருந்தாலும், தொடக்கத் தொகுதிகளை ஆதரிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் ஒரு முதிர்ச்சியான அனுபவம் வாய்ந்த குழுவைக் கொண்டுள்ளது. இங்கு ICTA யினால் விருத்தி செய்யப்பட்டுள்ள வசதிகளானவை, தொடக்கத் தொகுதிக்கு மிகப் பெரும் மேலதிக வசதியாக அமையும்." என்றார்.

அடுத்த தலைமுறை தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், ICTA இனால் ஆரம்பிக்கப்பட்ட ‘10,000 Ideas’ தொழில்நுட்ப புத்தாக்கத் திட்டங்களில் ஒன்று எனும் தகுதியை பெற்ற அல்லது ஏற்கனவே தகுதி பெற்றுள்ள எந்தவொரு குழு அல்லது தனிநபருக்கும் SPARX ஆய்வகமானது எப்போதும் திறந்திருக்கும். அது மாத்திரமன்றி, StartupSL தளத்தில் பதிவு செய்துள்ள போதிலும், சொந்த வணிக பதிவு இல்லாதவர்கள் அல்லது தங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து ஒரு வருடத்தை நிறைவு செய்யாதவர்களும் இதற்கு தகுதி பெறுவார்கள். StartupSL என்பது இலங்கையில் தொடக்கங்களுக்கான தேசிய ஒன்லைன் தளமாகும். இது, அதில் பதிவு செய்துள்ளவர்களை தொடக்கத் தொகுதி ஆரம்பிப்பாளர்களுடன் இணைப்பதுடன், அதன் மறுதலையையும் அனுமதிக்கிறது. 'STEP' இன் கூட்டாளிகளான, ICTA இன் முன்கூட்டிய அடைகாத்தல் திட்டமும் SPARX ஆய்வகத்தை அணுகுவதற்கான அனுமதியைக் கொண்டுள்ளது.

"குறிப்பாக தொடக்கத் தொகுதிகளுடன் நெருக்கமாக இருப்பதனை ICTA உறுதி செய்வதுடன், இலங்கையிலுள்ள பல தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது" என அண்மையில் Global Startup Awards 2021 விருது வழங்கும் விழாவில் 'The Best Co-working Space’ விருது பெற்ற, Hatch Works நிறுவனர் ஜீவன் ஞானம் தெரிவித்தார்.

SPARX ஆய்வகத்தில் உள்ளவர்கள், முழு தொடக்க தொகுதி அமைப்பிலிருந்தும் ஏராளமான உதவியைப் பெறுவார்கள். SPARX ஆய்வகத்தை வார நாட்களில் மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 7.00 மணி வரை அணுகலாம் என்பதுடன், வீடியோ கூட்டு அழைப்புகள், Dialog மற்றும் SLT Mobitel மூலம் இயங்கும் இலவச அதிவேக WiFiஉள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு காணப்படுகின்றன. தேவைகளின் அடிப்படையில், தொடர்ந்து இரண்டு வாரங்கள் அல்லது தினசரி இரண்டு குழு உறுப்பினர்களுடன் தங்களுடைய தொடக்க தொகுதியாளரை தங்க வைப்பதற்கான அணுகலையும் அவர்கள் பெறுவார்கள். ஆட்சேர்ப்புக்கான வணிகத்திற்கான இடத்தைத் தேடும் தொடக்க தொகுதியாளர்களுக்கான பிரத்தியேகமான இடம் வழங்கப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேரான சந்திப்புகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் பெறலாம். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு [email protected] மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்பு கொள்ளவும்.

ICTA பற்றி
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA, இலங்கையை டிஜிட்டலை உள்ளடக்கிய நாடாக மாற்றும் நோக்குடன் நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. இலங்கை பிரஜைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்காக, பயனுள்ள டிஜிட்டல் தீர்வுகளுடன் தேசத்திற்கு சேவை செய்ய ICTA முயற்சிக்கிறது. ICTA பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.icta.lk இணையத்தளத்தை பார்வையிடவும்.