நிப்ராஸ் தேசிய இராணுவ தடகளப் போட்டியில் 2 தங்கம் 1 வெள்ளி பெற்று சாதனை

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், கொழும்பு பல்கலைக்கழ மாணவருமான ஆர்.எம்.நிப்ராஸ் 2020/2021 ஆண்டுக்கான 57 ஆவது தேசிய இராணுவ தடகளப் போட்டியில் பங்கு கொண்டு 02 தங்கம் உள்ளடங்களாக 01 வெள்ளிப் பதக்கமுமாக 03 பதக்கங்களை பெற்று சாதனை ஈட்டி உள்ளார்.

மேலும் இப்போட்டியானது 22.11.2021 தொடக்கம் 26.11.2021 வரை கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. தேசிய இராணுவ தடகளப் போட்டியில் பங்கு பற்றிய இவர் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 1 ஆம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் 4 x 1500 மீற்றர் ஓட்டத்தில் 1ஆம் இடம் பெற்று தங்கத்தினையும், 4 ஒ 800 மீற்றர் ஓட்டத்தில் 2ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளார்.

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான நிப்ராஸ் பாடசாலை, வலய, மாகாண, தேசிய மட்டத்திலான போட்டிகளிலும் பல பதக்கங்களை பெற்றுக் கொண்டவர் ஆவார்.

இவரின் உயர் படிப்புடன் கூடிய விளையாட்டுத் திறனை மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரி அதிபர் கே.றஸீம், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மூதூர் பிரதேச மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மூதூர் தினகரன் நிருபர்