அர்ஜுன் இன்றி நடத்த நீதிமன்றம் நேற்று அனுமதி

2015 பிணைமுறி வழக்கு விசாரணையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்தியா புஞ்சிஹேவா ஆகியோரின்றி பிணைமுறி மோசடி வழக்கை முன்கொண்டு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நிரந்த நீதாயம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.