தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகளுக்கு எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி

தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகளுக்கு எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி-LP Gas Distribution Allowed for Industry and Crematorium

தொழிற்சாலைகள் மற்றும் சுடுகாடுகளிலுள்ள தகனசாலைகளின் பயன்பாட்டிற்கு எரிவாயுவை (LP Gas) விநியோகிக்க எரிவாயு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நாட்டிலுள்ள 2 எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

சிலிண்டரில் எரிவாயு கசிவை கண்டறிவதற்காக செலுத்தப்படும் நாற்றத்தை ஏற்படுத்தும் எதைல் மெர்கப்டன் (Ethyl Mercaptan) கொண்டிருக்க வேண்டிய அளவு 14 அலகுகளாக இருக்க வேண்டிய நிலையில், அது 5 ஆக இருப்பது கண்டறியப்பட்டதால், அதனை உரிய தர நிலைக்கு பேணும் வரை சந்தைக்கு வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயுவின் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சரர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.