நாடு முழுவதும் விரைவில் புதிய வேலைத்திட்டங்கள்

SLFP தலைவர் மைத்திரிபால அறிவிப்பு

நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் பின்னரான விடுமுறையுடன் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

நேற்று முன்தினம் (02) நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 ஆம் திகதி, வரவு செலவு திட்டத்தின் பின்னர் பாராளுமன்ற விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதையடுத்து, நாடுமுழுவதும் தாங்கள் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்துரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.