அடுத்த பாதுகாப்பு அமைச்சர் தான் என பொன்சேகா கனவு

எல்லை கடந்த கனவு என்கிறார் நிர்மலநாதன் எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தி அரசில் தானே பாதுகாப்பு அமைச்சரென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி எல்லை கடந்து கனவு காண்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றினார். முன்னதாக சரத் பொன்சேக்கா எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. பல இனவாதக் கருத்துக்களை முன்வைத்தார். அதுமட்டுமல்ல அடுத்த அரசில் தானே பாதுகாப்பு அமைச்சர் என்றும் கூறினார்.அதாவது கனவுகள் காணும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. அனைவரும் கனவுகள் காணலாம்.ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு.எனவே முன்னாள் இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா அந்த எல்லைக்குள்ளேயே கனவு காண வேண்டும். .தானே அடுத்த பாதுகாப்பு அமைச்சர் என்று அவர் கனவின் எல்லை கடந்து சென்று விட்டார் என்றும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்