ரஞ்சன் ராமநாயக்க மீது 2ஆவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ரஞ்சன் ராமநாயக்க மீது 2ஆவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு-Ranjan Ramanayake 2nd Condemn of Court

- ஜனவரி 24இல் எடுத்துக் கொள்ள தீர்மானம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்கான தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் வருடம் ஜனவரி 24ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் இன்றையதினம் (03) சிறைச்சாலை அதிகாரிகளால் ரஞ்சன் ராமநாயக்க உச்ச நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பிலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 3 மாதங்கள் அவை நடவடிக்கையில் பங்குபற்றாமை காரணமாக அவர் பாராளுமன்ற உறுப்புரிமையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.