ஸஹ்ரானின் அடிப்படைவாத விரிவுரையில் கலந்து கொண்டதாக 25 வயது நபர் கைது

ஸஹ்ரானின் அடிப்படைவாத விரிவுரையில் கலந்து கொண்டதாக 25 வயது நபர் கைது-25 Year Old From Hingula Arrested by TID-Attending Class of Zahran Hashim's Ideology

அம்பாந்தோட்டை, சிப்பிக்குளத்தில் ஸஹ்ரான் ஹாசிம் நடத்திய அடிப்படைவாத விரிவுரையில் கலந்து கொண்டதாக, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது சந்தேகநபர் பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தினால் (TID) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, TID யின் கண்டி பிரிவு அதிகாரிகளால் நேற்றிரவு (02) குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்பைப் பேணி வந்ததாகவும், அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக, நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அதற்கமைய குறித்த விடயங்கள் தொடர்பில் TID யினர் குறித்த நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.