இந்தியாவுக்குள்ளும் முதன்முதலாக ஊடுருவியது ஒமிக்​ேரான் வைரஸ்!

வெளிநாட்டிலிருந்து வந்து சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர் இருவரில் கண்டுபிடிப்பு!

இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்​ேரான் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை மத்திய அரசு நேற்று உறுதி செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அது ஒமிக்​ேரானா என சோதனை செய்த போது அதுஒமிக்​ேரான் என தெரியவந்தது. அவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கு 65 வயது, இன்னொருவருக்கு 45 வயது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென்னாபிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா, ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது.

ஒமிக்ரோன் பரவலால் தென் ஆபிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன என தென் ஆபிரிக்க மருத்துவர் உன்பென் பிள்ளைய் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு அதிமாக காணப்படும் கவுதங் மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் உன்பென் பிள்ளைய் இது பற்றி கூறியதாவது:

தற்போது மிதமான பாதிப்புகளே ஏற்பட்டு இருக்கின்றன.

தென் ஆபிரிக்காவில் சமீபத்தில் தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 20 மற்றும் 30 வயதில் இருப்பவர்களே. இந்த வயது வரம்பில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் மிதமாகவே இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸின் கவலைக்குரிய புதிய ஒமிக்ரோன் திரிபு கனடாவில் முதன் முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஒட்டாவாவில் உறுதிப்படுத்தப்பட்டதாக ஒன்டாறியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட நபர்கள் நைஜீரியாவிலிருந்து பயணம் செய்தவர்களாவர். அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் திரிபு பரவல் தொடர்பான அச்சங்களை அடுத்து தென்னாபிரிக்க பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை கனடா விரிவுபடுத்தியது. எனினும் இந்தப் பட்டியலுக்குள் நைஜீரியா உள்ளடக்கப்படவில்லை. ஒமிக்ரோன் திரிபில் இருந்து கனேடியர்களைப் பாதுகாக்க சிறந்த தீர்வு அது கனேடிய எல்லைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்துவதாகும். இந்நிலையில்வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என ஒன்டாறியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் கூறினார்.

ஒமிக்ரோன் திரிபு வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக் கூடியதென ஆரம்ப கட்ட தரவுகள் வெளிப்படுத்துவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் சர்வதேச அளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடா பொது சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ​ேயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தங்களுடைய மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் கொரோனோ வேரியன்ட் ஒமிக்​ேரான் மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாகவும் அவசகால நிலையை அறிவிப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து கவர்னர் கேத்தி ஹோச்சுல் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தற்போது இருக்கும் குளிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நியூ​ேயார்க் மாநிலத்தில் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அரசு சுகாதார நலத்துறைக்கு உதவ இன்று நான் ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டேன். கொரோனாவின் அடுத்த திரிபான ஒமிக்ரோன் நம்மை நெருங்குவதற்குள் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கையின் மூலம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியை விரைவாகப் பெற முடியும், என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனாவின் புதிய திரிபு மிக அபாயகரமானது. இந்த மாறுபாடு அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருக்கிறது, மற்ற கொரோனா திரிபுகளுடன் ஒப்பிடும் போது, இந்த மாறுபாட்டின் மூலம் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த மாறுபாட்டின் எண்ணிக்கையானது சுமாராக தென்னாபிரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.