நகரத் திட்டமிடலை மூன்று ஆண்டுகளுக்குள் மேம்படுத்துவதற்காக விசேட செயல் திட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை

நாட்டில் நகர திட்டமிடல் துறையை 2022 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டுகளில் மேம்படுத்தி கட்டியெழுப்புவதையும், நகர அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்களையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வேலைத் திட்டத்தை நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் நகரத் திட்டமிடல் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் பொதுசுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்துடன் அண்மையில் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் இலங்கை அலுவலகத்தின் பிரதான முகவர் டெட்சன் யமடா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின்படி, கழிவுகளை அகற்றுதல் மற்றும் சமூக சுகாதாரம் தொடர்பான செயலூக்கமான நிலையான வேலைத்திட்டத்தை இலங்கை முன்னெடுக்கும்.

அந்தத் திட்டங்களின்படி, நகர்ப்புற திட்டமிடலுக்கான மிகவும் மேம்பட்ட நகர்ப்புற திட்டமிடல் திட்டத்தை உருவாக்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உதவி செய்யப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கத்தின் வரையறையின்படி, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அலுவலகத்திற்கு சொந்தமான வளாகத்தில் ஒரு நகர ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டு, நிபுணத்துவத்தை வழங்குவதற்கான முக்கிய மையமாக செயல்படுத்தப்படும். மேலும், இந்த ஆய்வுப் பிரிவானது நகர திட்டமிடலுக்குரிய பயிற்சியை வழங்கும் மத்தியஸ்தானமாக செயல்படுகிறது. சிறப்புப் பயிற்சியாளர்கள் மற்றும் உயர்தர பயிற்சி உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பம் ஆகியவை ஆய்வு மையத்தில் நிறுவப்படும்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து செயற்றிட்டங்களுக்கும் திட்டமிடல் செயல்முறைக்கும் புதிய வடிவமைப்பு கருவிகள் மற்றும் முறைகளை அறிமுகப்படுத்துதல், பயிற்சியாளர்களுக்கான பயிற்சி, பயிற்சியாளர்களுக்கான வசதிகளை வழங்குதல், மூலோபாய திட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் நகர அபிவிருத்திகளுடன் அணுகுமுறைகள், ஏற்பாடு ஆராய்ச்சி ஆலோசனைகள், மற்றும் திறன் மேம்பாட்டிற்கு தேவையான மென்பொருள் மற்றும் உபகரணங்கள் இந்த ஸ்தாபனம் நகர அபிவிருத்தி அதிகாரசபையை செயல்முறைகளை இலகுவாக்குவதுடன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தரவு பரிமாற்ற நடவடிக்கைகளை எளிதாக்கும்.

இந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் இலங்கையின் நகர அபிவிருத்தி செயன்முறையானது விஞ்ஞான ரீதியாகவும், துரிதப்படுத்தப்பட்டதாகவும், உற்பத்தித் திறன் கொண்டதாகவும் மாறும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு வலியுறுத்துகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடும் வேளையில் அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா,அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (நகர அபிவிருத்தி) அஞ்சலி தேவராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, அதன் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளிவிவகார திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சம்பத் மந்திரிநாயக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் இலங்கை அலுவலகத்தின் பிரதான பிரதிநிதி டெட்சன் யமடா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதி நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட நிபுணர் நாமல் ரலபனாவ மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

டப்ளியூ.கே. பிரசாத் மஞ்சு
நகர அபவிருத்தி மற்றும்
வீடமைப்பு அமைச்சு